மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய மத்திய அமைப்புகள் சம்மன் மற்றும் தொடர் சோதனைகள் மூலம் ஒன்றிய பாஜக அரசு நெருக்கடி அளித்து வரு கிறது.
கலால் கொள்கை வழக்குத் தொடர் பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலை கைது செய்ய அமலாக்கத் துறை துடியாய் துடித்து வருகிறது. இந்த வரிசையில் சுரங்க ஊழலில் தொடர்பு உள்ளதாக கூறி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்ந்து 7 முறை சம்மன் அனுப்பி யுள்ளது அமலாக்கத்துறை. ஆனால் எனது மீதான புகார் நியாயமற்றது என அமலாக்கத்துறை சம்மனை ஹேமந்த் சோரன் தொடர்ந்து புறக்கணித்து வரு கிறார்.
இந்நிலையில், மத்திய அமைப்பு கள் ஜார்க்கண்ட் மாநில அதிகாரி களுக்கு நோட்டீஸ் அனுப்பி அரசு ஆவ ணங்களை கேட்டு மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு “இந் தியா” கூட்டணி கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறைக்கு “செக்” வைத்து அதிரடி வேலை யில் களமிறங்கியுள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். அது யாதெனில் மத்திய அமைப்பு களின் கேள்விகளுக்கு பதிலளிக் கவோ, எந்த ஆவணங்களையும் நேரடி யாக ஒப்படைக்கவோ, அவர்களின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவோ கூடாது என ஜார்க் கண்ட் மாநிலத்தின் அனைத்து துறை களுக்கும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் வந்தனா தாடெல் அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், “இனி அமலாக்கத்துறை, சிபிஐ அல்லது வருமான வரித்துறை போன்ற அமைப்புகளிடம் இருந்து, மாநில அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வந்தால், அவர்கள் உடனடியாக துறைத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும். அமைச்சரவை செயலகம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையை உள்ளடக்கிய “நோடல்” அமைப் பிற்கு துறைத் தலைவர் தகவலை அனுப்ப வேண்டும். இந்த “நோடல்” அமைப்பு மூலமாகவே இனி மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உரிய தகவல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என ஜார்க்கண்ட் முதன் மைச் செயலாளர் வந்தனா தாடெல் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த புதிய உத்தரவால் இனி மத்திய அமைப்புகள் நேரடியாக ஜார்க்கண்ட் அரசு துறைகளிடம் கேள்வி கேட்க முடியாது. “நோடல்” அமைப்பு தருவதை வைத்தே விசா ரணை செய்ய முடியும், சம்மன் அனுப்ப முடியும். ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கை யை “இந்தியா” கூட்டணி ஆளும் மாநி லங்கள் பின்பற்ற உள்ளதாக மற் றொரு தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.